ஈரோட்டில் பாஜக சார்பில் பொதுமக்களுக்கு இலவச சமையல் எரிவாயு மற்றும் அடுப்புகளை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி வழங்கினார். 
Regional03

ஈரோட்டில் 50 பேருக்கு இலவசமாக எரிவாயு சிலிண்டர் வழங்கல் :

செய்திப்பிரிவு

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதி பாஜக சார்பில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு மற்றும் அடுப்பு வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பாஜக மண்டல தலைவர் தாமரை மணாளன் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி, 50 ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு மற்றும் அடுப்புகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் வகையில் அனைவரும் உழைக்க வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்புசாரா மாநில செயலாளர்மணிவண்ணன், மாநில செயற்குழுஉறுப்பினர் பொன் ராஜேஸ்குமார், மாநில பட்டியல் இனப்பிரிவு துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் வைரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT