செய்துங்கநல்லூர் அரசு நூலகத்துக்கு வந்த ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் எம்எல்ஏவை வாசகர் வட்டத்தினர் வரவேற்றனர். 
Regional02

செய்துங்கநல்லூர் நூலகத்தில் எம்எல்ஏ ஆய்வு :

செய்திப்பிரிவு

செய்துங்கநல்லூரில் ரூ.4.92 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் திறந்து வைத்தார். பின்னர் அரசு நூலகம் வந்த அவரை வாசகர் வட்ட தலைவர் திருமலை, துணைத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு, நூலகர் லெட்சுமணன், துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். எம்எல்ஏ மரக்கன்று நட்டு வைத்தார். நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என, வாசகர் வட்டத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். நூலக கட்டிடத்தை பழுது பார்த்து தருவதாக உறுதியளித்த தோணி குடும்பத்தினை சேர்ந்த அப்துல், தூத்துக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் (கிராமப்புறம்) பத்மா , உதவி செயற்பொறியாளர் (மின் விநியோகம்) சந்திரன், செய்துங்கநல்லூர் உதவி மின்பொறியாளர் மகேஷ்குமார், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வி ஆகியோர் பாராட்டப்பட்டனர். 

SCROLL FOR NEXT