Regional02

போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது :

செய்திப்பிரிவு

வேலூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டங்களில் சிறுமிகளை கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 பேரை போக்சோசட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட் டம் பாணாவரம் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் தினேஷ்குமார் (24). இவர், 12-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி அவரை கடந்த 2-ம் தேதி கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வந்த புகாரின் பேரில் தினேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்து பள்ளி மாணவியை மீட்டு காப் பகத்தில் ஒப்படைத்தனர்.

அணைக்கட்டு

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பிரசாந்த் மீது போக்சோ சட்டம் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT