Regional02

ஆரணி அருகே - மக்களுக்கு இடையூறு செய்த 7 பேர் கைது :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த லாடப்பாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரு கும்பல் செயல்பட்டுள்ளது.

இதையறிந்த ஆரணி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, ரகளையில் ஈடுபட்ட வேல்முருகன்(36), கன்னியப்பன்(57), மணி(60), லாசர்(46), முருகேசன்(48) ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல், ஆரணி அண்ணா சிலை அருகே ரகளையில் ஈடுபட்டிருந்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம்(25), மணி(22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT