ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப் பள்ளியில் தேங்கியுள்ள மழை நீர். படம்:எல்.பாலச்சந்தர் 
Regional02

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கண்மாய்கள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதனால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாலை, அக்ரஹாரம் சாலை, தங்கப்பா புரம், வசந்த நகர், காட்டூரணி, பாரதி நகர், ஓம்சக்தி நகர், நாகநாதபுரம் ஆகிய தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல தேங்கியது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மழையால் ராமநாதபுரத்தில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் நிரம்பத் தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.ல்) வருமாறு:

ராமநாதபுரம்-13.60, தீர்த்தாண்ட தானம்-5.00, ராமேசுவரம்-3.20

SCROLL FOR NEXT