குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே உள்ள கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தை காவல் துறையினர் பார்வையிட்டனர். 
Regional01

ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மூலம் தகர்த்து கொள்ளையடிக்க முயற்சி :

செய்திப்பிரிவு

குமாரபாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மூலம் தகர்த்து பணம் கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

குமாரபாளையம் - பள்ளிபாளையம் சாலை அருகே கனரா வங்கி ஏடிஎம் உள்ளது. நேற்று காலை பணம் எடுக்க வந்த பொதுமக்கள் சிலர் ஏடிஎம் இயந்திரம் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக குமாரபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல் துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தின் ஒரு பகுதியில் வெல்டிங் மூலம் தகர்க்க முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது. மேலும், சிசிடிவி கேமராவில் கொள்ளை முயற்சி சம்பவம் பதிவாகாமல் இருக்க பெயின்ட் அடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

குமாரபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT