Regional01

உரிமையாளர்கள் தடுப்பூசி போடாவிட்டால் நிறுவனங்களுக்கு ‘சீல்’ :

செய்திப்பிரிவு

குமாரபாளையத்தில் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும், என நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

குமாரபாளையம் நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு வணிக நிறுவனங்களுக்கும் ஆய்வுக்கு செல்வர். அப்போது இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்களை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டாவிட்டால் அந்த நிறுவனம் மூடி, சீல் வைக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை 100 சதவீதத்தை அடைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் தொடர்பாக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது, என்றார்.

SCROLL FOR NEXT