Regional03

நங்கவரம் பகுதியில் - நெல் கொள்முதல் செய்ய நிரந்தர கட்டிடம் : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

செய்திப்பிரிவு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்தில் கவுண்டம்பட்டி சுப்பிரமணி பேசியது: குளித்தலை வட்டம் நங்கவரம் பகுதியில் நெல்கொள்முதல் செய்வதற்கு நிரந்தர கட்டிடம் கட்டி, ஆண்டு முழுவதும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து, பல்வேறு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.லியாகத், கவிதா, வேளாண்மை இணை இயக்குநர் சிவசுப்பிரமணி மற்றும் விவசா யிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT