Regional03

தனியார் பள்ளி வேன் மோதி விவசாயி உயிரிழப்பு : உறவினர்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள தத்தனூர் மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு(60). இவர், தனது பேரன் ரஞ்சித்துடன் நேற்று அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வேன் மோதியதில், தங்கராசு அதே இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த ரஞ்சித் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது,

SCROLL FOR NEXT