ஊர்மேலழகியான் கிராமத்தில் விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. 
Regional03

விவசாயிகளுக்கான கருத்தரங்கு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், ஊர்மேலழகியான் கிராமத்தில் மத்திய அரசின் ஆஸாதிகா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் மதராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் உர நிறுவனம், வேளாண்துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

உர நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளர் சிவகுமார் வரவேற்றார். தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) நல்லமுத்துராஜா தொடக்கவுரையாற்றினார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியம் சிறப்புரை யாற்றினார்.

உதவி வேளாண்மை இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ஆதிநாதன், வட்டார வேளாண் உதவி இயக்குநர் சேதுராமலிங்கம், வேளாண் அறியியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சுகுமார், இளவரசன், மோனிகா, திருவனந்தபுரம் மத்திய கிழங்கு வகை பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முத்துராஜ் ஆகியோர் உரையாற்றினர். ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT