ஈரோடு அகத்தியர் வீதியில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமினை ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
Regional01

ஈரோட்டில் 620 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று 620 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் இருநாள் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 569 மையங்களில் நடந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 64 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இது தவிர 40 நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. ஈரோடு பேருந்து நிலையம், ஆர்.கே.வி.சாலை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு, செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு முகாமிற்கு வரவழைக்கப்பட்டனர். இரண்டாவது நாளாக மாவட்டம் முழுவதும் 620 மையங்களில் இன்றும் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கவுள்ளது.

SCROLL FOR NEXT