Regional02

- ஆன்லைன் மூலம் முதியவரிடம் ரூ.50 ஆயிரம் பறிப்பு :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகே, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஹனீபா(82). இவரது மொபைல் போனுக்கு கடந்த 19-ம் தேதி இந்தியன் வங்கியின் மேலாளர் பேசுவதாகக் கூறி ஒருவர் தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டதாகக் கூறி கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணைக் கேட்டுள்ளார்.

இதை நம்பிய ஹனீபா ஏடிஎம் எண்களை தெரிவித்தார். உடனே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. இதுகுறித்து ஹனீபா புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT