தேன்கனிக்கோட்டை அருகே பெட்டாமுகிலாளம் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கஞ்சா பயிர் செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாளம் கிராம நிர்வாக அலுவலர் ராமன் (28) மற்றும் ஊழியர்கள், ஜெயபுரம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு பெட்டமுகிலாளம் வனத்தை ஒட்டி வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அய்யன்துரை (66) என்பவர் விவசாயம் செய்து வந்தது தெரிந்தது. மேலும், அதில், ஒரு சென்ட் இடத்தில் கஞ்சா பயிரிட்டி ருந்ததை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து 45 கஞ்சா செடிகளை அகற்றினர். இதுதொடர்பான புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து அய்யன்துரையை கைது செய்தனர்.