திருநெல்வேலியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வாகனத்தை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள், 9 ஊராட்சி ஒன்றியங்கள் அனைத்திலும் வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பதின் அவசியத்தையும், அதன் பயனையும் அறியச் செய்யும் வகையிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை விரைந்து அமைத்திட விழிப்புணர்வு எற்படுத்தும் பொருட்டும் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த பிரச்சார வாகனம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஆர்.கணேஷ்குமார், உதவி நிர்வாக பொறியாளர் தி.கனகராஜ், உதவி பொறியாளர் ஜி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.