Regional02

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட் டத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்வதால், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனால், சாத்தனூர் அணை, குப்பநத்தம் அணை மற்றும்செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில் ஜவ்வாதுமலை யில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் செங்கம் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. குப்பநத்தம் அணையில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செய்யாற்றின் இரு பக்கமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால், செங்கத்தில்இருந்து தளவாய்நாயக்கன் பேட்டைக்கு செல்லும் வழிதடத்தில், செய்யாற்றின் நடுவே உள்ள சிறிய பாலம் நேற்று அதிகாலை மூழ்கியது. இதனால், போக்குவரத்து பாதிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 1 கி.மீ., தொலைவுக்கு மாற்று பாதை வழியாக பொது மக்கள் சென்றனர்.

SCROLL FOR NEXT