ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் ஏ. சக்திவேல், நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னைதலைமை செயலகத்தில், நேரில் சந்தித்துதொழில்துறை சார்பில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக ஏ. சக்திவேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று நோயிலிருந்துதமிழகத்தையும், அதே வேளையில் தமிழகதொழில் துறையையும் முதல்வர் மீட்டெடுத்துள்ளார். சீரிய நடவடிக்கையினால் தமிழகம் இந்தியாவிலேயே தொழில்துறையில் முதல் மாநிலமாகஉருமாறுவதற்கு தமிழக அரசு அனைத்து முனைப்புடன், அல்லும் பகலும்அயராது பாடுபட்டு வருகிறது. பதவியேற்ற குறுகிய காலத்துக்குள்ளாகவே தொழில் துறைக்காக,எண்ணற்ற நல்லபல அறிவிப்புகளையும், தொழில் செய்ய உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டியதையும், நினைவு கூர்ந்து மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டை தெரிவித்தோம்.
அதேபோல், மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு, தலைமைச் செயலரின் தலைமையில் அமைக்கப்படும் என்றஅறிவிப்பு, தமிழ்நாடு ஏற்றுமதிமேம்பாட்டுகொள்கை வெளியீடு, குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களின் குறைகளை களைவதற்காக ஓய்வு பெற்றசெயலர் தலைமையில் உயர் மட்ட குழு அமைத்தது, திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வணிகவரிகோட்டம் உருவாக்கி தொழில் துறையினரின் சிரமத்தை குறைத்தது எனபல்வேறு திட்டங்களை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.