கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களிலும் நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் 26-ம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், 27-ம் தேதி ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 28-ம் தேதி வேப்பனப்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், 29-ம் தேதி பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் நடை பெறுகிறது.
இதேபோல் வருகிற நவம்பர் 9-ம் தேதி காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யிலும், 10-ம் தேதி ஓசூர் அரசு ஆர்.வி.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 11-ம் தேதி தளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 12-ம் தேதி தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 16-ம் தேதி மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 17-ம் தேதி சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெறவுள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, அதற்கான மருத்துவ சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மார்பளவு புகைப்படங்களுடன் முகாம் நடைபெறும் இடங்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.