Regional03

சங்ககிரி அருகே பெண் தற்கொலை விசாரணைக்கு பயந்து கணவரும் தற்கொலை :

செய்திப்பிரிவு

சங்ககிரி அருகே மனைவி தற்கொலை செய்து கொண்டதால், விசாரணைக்கு பயந்து கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.

சங்ககிரி அடுத்த வைகுந்தம் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (33). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார்.

இவரது மனைவி பிரியா (27). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மது அருந்தும் பழக்கம் கார்த்திக்குக்கு இருந்தது. இதை கைவிடக்கோரி நேற்று முன்தினம் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை பிரியா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் வீட்டில் இருந்து வெளியேறி அருகேயுள்ள வைகுந்தம் மாரியம்மன் கோயில் பகுதியில் கழுத்தை அறுத்துக் கொண்டு, பின்னர் அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற சங்ககிரி டிஎஸ்பி நல்லசிவம், இன்ஸ்பெக்டர் (பொ) தேவி தலைமையிலான போலீஸார், தம்பதியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், மனைவி தற்கொலை செய்து கொண்டதால், விசாரணைக்கு பயந்து கார்த்திக்கும் தற்கொலை செய்தது தெரிந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT