Regional03

லாரி கிளீனர் திடீர் மரணம் :

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலா ஜாவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் லாரி ஒன்றில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இவர் வேலுார் மாவட்டம் மூச்சூர்பட்டில் உள்ள ஏழுமலை என்பவருக்குச் சொந்தமான டாரஸ் லாரியில் ஓட்டுநர் ரகு என்பவருடன் கடந்த 3 மாதங்களாக கிளீனராக வேலை பார்த்து வந்தார்.

கர்நாடகாவிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தனியார் மில்லுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர். மாலை ராஜேந்திரனை லாரியிலேயே இருக்கும் படி கூறிவிட்டு ரகு சாப்பாடு வாங்கச் சென்றார். திரும்ப வந்து பார்த்தபோது, ராஜேந்திரன் லாரிலேயே மயங்கிய நிலையில் கிடந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள், அவர்இறந்து விட்டதாக தெரிவித்த னர். போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT