Regional01

நெல்லையில் பழனிசாமி உருவபொம்மை எரிக்க முயற்சி :

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி உருவபொம்மையை சிலர் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் அதிமுக கொடியேற்றிய சசிகலா குறித்து விமர்சித்து பேசிய முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்து அமமுகவை சேர்ந்த சிலர் திருநெல்வேலி வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே உருவபொம்மைகளை எரிக்க வந்தனர்.

அவர்களை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி உருவபொம்மையை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பழனிசாமி, ஜெயக்குமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அமமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT