Regional02

சட்ட விழிப்புணர்வு வாகனம் திருப்பூரில் தொடக்கம் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் தேசியசட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நிர்வாகம் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் சட்ட விழிப்புணர்வு வாகனப் பயணம் நேற்று தொடங்கியது.

திருப்பூர் மாவட்ட முதன்மைநீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சொர்ணம் ஜெ.நடராஜன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில், மாவட்ட நீதிபதி வி.பி.சுகந்தி முன்னிலை வகித்தார்.

பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற நடவடிக்கைகள் குறித்துசட்டவிழிப்புணர்வு குறும்படங்களை இந்த வாகனத்தில் ஒளிபரப்பி விழிப்புணர்வுஏற்படுத்தப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். சட்ட விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT