Regional02

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருப்பில் உள்ள - வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயன்படுத்தப்படாமல் இருப் பிலுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று திறக்கப் பட்டது.

அப்போது ஆட்சியர் கூறுகையில், "பயன்படுத்தப்படாமல் இருப் பில் வைத்துள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தச்சூர் கிராமத்தில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு உத்தரப்பிரதேச மாநிலம் எட்வா மாவட்டத்திற்கு அனுப்பி வைக் கப்படவுள்ளது" எனத் தெரிவித் தார்.

SCROLL FOR NEXT