வடமதுரை அருகே துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ வீரர் சடையப்பனின் உடலுக்கு நடைபெற்ற இறுதி மரியாதை. 
Regional02

எல்லையில் இறந்த வடமதுரை ராணுவ வீரர் உடல் அடக்கம் - :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள வாலிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் சடையப்பன்(43). இவர், அருணாசலப் பிரதேச மாநிலத்தில், ராணுவ நாயக் சுபேதாராக பணியில் இருந்தார்.

கடந்த திங்கள்கிழமை சீன எல்லையான ஓரக் என்னு மிடத்தில் பணி யில் இருந்த அவர் அங்கிருந்த காலநிலையால் மயக்கமடைந்து இறந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கி ருந்து நேற்று அதிகாலை அவரது சொந்த ஊரான வாலி செட்டிபட்டிக்கு கொண்டு வரப்பட்டது. சடையப்பனின் உடலுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்தனர்.

இதையடுத்து ஆட்சியர் ச.விசாகன், மாவட்ட எஸ்.பி. வி.ஆர்.,சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, பரமசிவம் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ராணுவ அதிகாரிகள் தலைமையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சடையப்பனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT