Regional02

தகராறில் ஈடுபட்ட7 பேர் கைது :

செய்திப்பிரிவு

ஊத்துக்குளி அருகே நஞ்சப்பநாயக்கனூரில் வாடகை வீட்டில் வடமாநிலத்தொழிலாளர்கள் பலர் தங்கியுள்ளனர். இவர்கள்,பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில்அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, அடிதடியில் ஈடுபட்டனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி போலீஸார், பிஹார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை அமர்சீத் பஸ்வான் (35), விகாஸ்குமார் (24), சன்னிக்குமார் (19), மணீஸ்குமார் (27), சுனில் பஸ்வான் (25), விகாஸ்குமார் (21) மற்றும் பப்புமகது (41) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

SCROLL FOR NEXT