Regional02

பல்லடத்தில் வரும் 22-ம் தேதி மனை வரன் முறை முகாம் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு. வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 1980-ம் ஆண்டு ஜனவரி, 1-ம் தேதிக்கு பின்னும் 2016, அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்னரும் பத்திரப்பதிவு செய்த மனைகளை வரன் முறைப்படுத்த வேண்டியது அவசியம். அதற்காக பல்லடம் பொங்கலூர் ஒன்றியம் மற்றும் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன் முறைப்படுத்தும் சிறப்பு முகாம் வரும் 22-ம் தேதி, பல்லடம் பி.எம்.ஆர். திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

திருப்பூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தால் ‘SPFW' எண் வழங்கப்பட்ட மனைப்பிரிவில் இருப்பவர்கள் வரன்முறை செய்யாமல் விடுபட்டவர்கள், இம்முகாமில் பங்கேற்று வரன்முறை செய்து கொள்ளலாம். இணையதள விண்ணப்பம், கிரய ஆவணம், அன்றைய தேதியில் உள்ள கிரய ஆவணம், வில்லங்கச் சான்று, மனைப்பிரிவு வரைபடம் மற்றும் நில உரிமையாளரின் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றுடன் சிறப்பு முகாமில் பங்கேற்க வேண்டும். இதுவரை வீட்டுமனை அங்கீகாரம் பெறாமல் உள்ளவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT