Regional02

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் - விடுபட்ட குளங்களை இணைக்க மா.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் அவிநாசிஒன்றியம் ராயன்கோவில் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11-வது மாநாட்டுக்கு பழங்கரை முன்னாள்ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.வேலாயுதம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியப்பன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும். அவிநாசி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். 708 கிராமங்களில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி, வீடு களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.

அவிநாசி அரசு மருத்துவமனையை நவீன வசதிகள் கொண்டமருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், அவசர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்தி, தேவையான சுகாதாரப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

அவிநாசியில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக, தரம் உயர்த்தி தினக்கூலியை ரூ.300-ஆக உயர்த்தவேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT