சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாகவுள்ள 3 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மற்றும் 6 ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வரும் 22-ம் தேதி நடக்கிறது.
சேலம் மாவட்டத்தில் காலியாக இருந்த மாவட்ட ஊராட்சிக்குழு 10-வது வார்டு உறுப்பினர், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய 9-வது வார்டு உறுப்பினர், 10 ஊராட்சித் தலைவர், 12 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 24 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலியாக உள்ள ஊராட்சித் துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வரும் 22-ம் தேதி நடக்கிறது. இதன்படி, தாரமங்கலம், மேச்சேரி, பனமரத்துப்பட்டி ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் மறைமுகத் தேர்தல் 22-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.
அதேபோல, தாசநாயக்கன்பட்டி, தென்னம்பிள்ளையூர், வீராட்சிபாளையம், செட்டிமாங்குறிச்சி, நல்லாகவுண்டம்பட்டி, மாரமங்கலம் ஆகிய ஆறு கிராம ஊராட்சிகளில் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.