காஞ்சிபுரத்தில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சம் சிக்கியது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 போலீஸார் கொண்ட குழுவினர் அந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.
அப்போது துணை இயக்குநர் பழனியிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.1,66,910 சிக்கியது. பின்னர் ஊழியர் ஒருவரிடம் இருந்து ரூ.29,490, மற்றொரு ஊழியரிடம் இருந்து ரூ.8,900 கணக்கில் வராத பணம் சிக்கியது.
வழக்குப்பதிவு