இதுகுறித்து ரெங்கனுக்கு உறவினர் மூலம் விஜய் தகவல் தெரிவித்தார். அதனையடுத்து ரெங்கன் ராமநாதபுரம் வந்தார். அங்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த விஜய், ஐஸ்வர்யா மற்றும் ரெங்கன் உள்ளிட்டோாிடம் மகளிர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை கூறினர்.
பின்னர், ஐஸ்வர்யாவை திருச்செந்தூர் போலீஸாரிடம் ஒப்படைக்கும் வரை அவரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மனநல ஆலோசனை மையத்தில் தங்க வைத்தனர். அங்கு பெண் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை குளியலறைக்கு சென்ற ஐஸ்வர்யா நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த பெண் போலீஸும், செவிலியரும் சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.