Regional01

ஆமை கவச பூச்சி தாக்குதலை தடுக்க நடவடிக்கை :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் ஆமை கவச பூச்சி மக்களை தாக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெரியகல்ராயன்மலை, மேல்நாடு கிராமம், செம்பருக்கை பகுதியில் காணப்படும் ஆமை கவச பூச்சியினங்களை தடுப்பது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, ஆமை கவச பூச்சியை கட்டுப்படுத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, உள்ளாட்சித்துறை, மருத்துவ துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பூச்சிகளால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், பூச்சிகளின் பரவலை தடுப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT