Regional04

பர்கூர் அருகே கார்கள் மோதல் 2 பேர் உயிரிழப்பு: 5 பேர் படுகாயம் :

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் அணில்குமார் (49). இவரது மனைவி அபர்ணா (39). இவர்களது மகள்கள் அகான்ஷா (17), அக்ஷரா (10). நேற்று தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர் ரம்யா (33) ஆகியோருடன் காரில் குடும்ப நிகழ்ச்சிக்காக, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சென்றார்.

காரை அணில்குமார் ஓட்டினர். பிற்பகல் 2.30 மணியளவில், கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிஆர்ஜி மாதேப்பள்ளி என்னுமிடத்தில் தனியார் பள்ளி எதிரே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் குறுக்கே உள்ள தடுப்பினை கடந்து எதிர்திசைக்கு சென்று கவிழ்ந்தது.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த மற்றொரு கார், கவிழ்ந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அணில்குமாரின் மகள் அக்ஷரா, ரம்யா ஆகியோர்நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த அணில்குமார், அபர்ணா, அகான்ஷா மற்றும் மற்றொரு காரில் வந்த பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்த பிரபாகர், ராஜா உள்ளிட்ட 5 பேரை, கந்திகுப்பம் போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கந்திகுப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT