Regional02

மத்திய அரசு நலத்திட்டங்கள் தேசியக்குழு ஆய்வு :

செய்திப்பிரிவு

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத் தில் உள்ள ஊராட்சிகளில் மத்திய அரசு நலத்திட்டங்களை தேசியக்குழு சார்பில் தணிக்கை மற்றும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை ஊராட்சி ஒனறியத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை தேசிய அளவிலான சீனிவாச பிரசன்னா தலைமையிலான குழுவினர் கருப்பம்பாளையம், காக்காவாடி, கே.பிச்சம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தணிக்கை மற்றும் கள ஆய்வு நேற்று செய்தனர்.

ஆய்வின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டப் பணிகள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தனிநபர் பயன்பெறும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களை ஆய்வு செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், பாலசந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT