Regional03

இந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என பேசவில்லை: சீமான் :

செய்திப்பிரிவு

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் அருள் அண்மையில் மர்மமானமுறையில் உயிரிழந்தார். இந்நிலையில் வழக்கறிஞர் அருளின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது;

கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பி வாருங்கள் என்று நான் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. நான் எங்கேயும் அப்படி பேசவில்லை. பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வேண்டுமேன்றே இது போன்று பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர் என்றார்.

முன்னதாக உயிரிழந்த அருளின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

SCROLL FOR NEXT