Regional03

கலால் உதவி ஆணையருக்கு சார் ஆட்சியராக பொறுப்பு :

செய்திப்பிரிவு

கலால் உதவி ஆணையருக்கு திருப்பத் தூர் சார் ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த அலர்மேல்மங்கை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனால், திருப்பத்தூர் சார் ஆட்சியராக வேறு யாரும் நியமிக்கப்படாததால், சார் ஆட்சியர் பணியிடம் காலியாக உள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூர் சார் ஆட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி அக்டோபர் 19-ம் தேதி (நேற்று) முதல் மறு உத்தரவு வரும் வரை திருப்பத்தூர் கலால் உதவி ஆணையராக பணியாற்றி வரும் பானு, திருப்பத்தூர் சார் ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) வில்சன்ராஜசேகரன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT