Regional03

ஒரே பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் - ஆசிரியர்களை இடமாறுதல் செய்வதற்கு கடும் எதிர்ப்பு :

செய்திப்பிரிவு

ஒரே பள்ளியில் 10, 20 ஆண் டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களை இடமாறுதல் செய் வதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்ட அறிக்கை:

19 மாதங்களாக மூடியிருந்த பள்ளிகளை நவ.1-ம் தேதி திறப் பதை வரவேற்கிறோம். கரோனா தடுப்பு உபகரணங்களை வாங்க வேண்டுமென பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், பள்ளிகளில் அதற்கான நிதி வசதி இல்லை. மேலும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் இக்கல்வி ஆண் டுக்கான நிதியை பள்ளிகளுக்கு வழங்கவில்லை.

இதனால் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். ஒரே பள்ளியில் 10, 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களை இடமாறுதல் செய்வது குறித்து, சில வரையறைகள் வைத்துள் ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

இது ஆசிரியர்களிடம் அதிர்ச்சி யையும், பதற்றத்தையும் ஏற் படுத்தி உள்ளது.

ஆசிரியர் பணி என்பது நிர்வாகப் பணி அல்ல. இதனால் அவர்களை இடமாற்றம் செய்வது அவசியம் இல்லை.

ஒரே பள்ளியில் தொடர்ந்து பணிபுரியும்போதுதான் மாண வர்கள் கல்வி முன்னேற்றமும், பள்ளி வளர்ச்சியும் ஏற்படும். 10, 20 ஆண்டுகள் பணி முடித் தவர்கள் ஓய்வு பெறும் வயதை எட்டியவர்களாக இருப்பர்.

இதனால் ஆசிரியர், மாண வர்கள் நலனை கருத்தில் கொண்டு 10, 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களை இடமாறுதல் செய்யும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.

ஜீரோ கவுன்சலிங் நடத்தக் கூடாது. விருப்ப மாறுதல் அடிப் படையில் வெளிப்படையான பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். இல்லாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT