Regional02

சந்தன கடத்தல் வீரப்பன் சமாதியில் ஆதரவாளர்கள் அஞ்சலி :

செய்திப்பிரிவு

மேட்டூர் அடுத்த மூலக்காட்டில் உள்ள சந்தன கடத்தல் வீரப்பனின் சமாதியில் அவரது நினைவுநாளை முன்னிட்டு, வீரப்பனின் மனைவி, மகள் மற்றும் ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அடுத்த மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

நேற்று அவரது 17-வது நினைவு நாள். இதையொட்டி, அவரது சமாதியில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, மகள் வித்யாராணி, வீரப்பனின் அண்ணன் மாதையன் குடும்பத்தினர், மறுமலர்ச்சி வன்னியர் உரிமை பாதுகாப்பு சங்கத் தலைவர் கோ.வி.மணி மற்றும் வீரப்பனின் ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி, மூலக்காட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தனிப்பிரிவு மற்றும் உளவுப் பிரிவு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT