Regional01

ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் மனைவி உட்பட 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் இளங்கோவன் (40). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஊத்துமலை அருகே பலபத்திராமபுரம் பகுதியில் இளங்கோவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீஸார் அங்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இளங்கோவனின் மனைவி உமாவுக்கும் (35), சங்கரன்கோவிலைச் சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவருக்கும் இடையே நட்பு இருந்துள்ளது.

இதற்கு இளங்கோவன் இடையூறாக இருப்பதாகக் கருதியதால் உமா தூண்டுதலின்பேரில் முத்துக்குமார், அவரதுஅண்ணன் சீனிவாசன் (38), நண்பர் சுரேஷ் ஆகியோர் இளங்கோவனை மது குடிக்க அழைத்து வந்து, கொலை செய்ததுதெரியவந்தது.

இதையடுத்து, உமா, முத்துக்குமார், சீனிவாசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT