Regional01

அரியலூரில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் :

செய்திப்பிரிவு

அரியலூர் நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணி யாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாத ஊதியத்தை இதுவரை வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒவ்வொரு மாதமும் தங்களது ஊதியத்தை போராடியே பெற வேண்டி உள்ளதாகவும், 18-ம் தேதி ஆகியும் இதுவரை கடந்த மாத சம்பளத்தை வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர். தீபாவளி நெருங்குவதால் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT