Regional01

ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் தி.மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அமிர்தராஜ், மாவட்ட இணைச் செயலாளர் மனோகரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், “மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களின் பணிக் காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும், கரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சுகுமார், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதேபோல், அனைத்து ஒன்றிய அலுவல கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT