Regional01

இன்று முதல் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் :

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தல், கரோனா பொதுமுடக்கம் அதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் என கடந்த ஓராண்டாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் இருந்து வந் தது. தற்போது ஊரடங்கு தளர் வுகள் அளிக்கப்பட்டதோடு, ஊரக உள்ளாட்சித் தேர்தலும் முடிந்துவிட்டது. இந்நிலையில், இன்று முதல் அனைத்து திங்கள்கிழமைகளிலும் பொது மக்கள்குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சி யர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்படும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரடி யாக அளிக்கலாம். பொது மக்கள்கட்டாயமாக முகக்கவசம் அணிந்தும் தனிமனித இடை வெளியைபின்பற்றியும் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று ஆட்சியர் தர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT