Regional02

உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு :

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கிணற்றில் ஆண் சடலம்ஒன்றை தீயணைப்புத் துறையி னர் நேற்று மீட்டனர்.

உளுந்தூர்பேட்டை பேரூராட் சிக்குட்பட்ட விருத்தாசலம் சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணறு உள்ளது.

இந்த கிணற்றில் அடை யாளம் தெரியாத நபர்ஒருவரின் சடலம் கிடப்பதைக்கண்ட அப்பகுதி மக்கள் பேரூ ராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் தீய ணைப்புத்துறையினருக்கு தக வல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர்.

இதுதொடர்பாக உளுந் தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். உயிரிழந் தவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எவரேனும் தள்ளி விட்டு கொலைசெய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின் றனர்.

SCROLL FOR NEXT