வில்லிபுத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார். மின்வாரி யத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பூமாதேவி(47).
இவர் விருதுநகர் காந்திபுரம் தெருவில் உள்ள உறவினர் ஹரிபிரசாத் என்பவரிடம் சீட்டுப் பணம் ரூ.90 ஆயிரத்தை பெற்றுக் கொண்டார். பின்னர் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ராஜபாளையம் செல்லும் தனியார் பேருந்தில் சென்றார். விருதுநகர் தனியார் பொறியியல் கல்லூரி அருகே பேருந்து சென்றபோது ரூ.90 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆமத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.