அதிமுக பொன்விழா விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று கொண்டாடப் பட்டது. விருதுநகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப் படங்களுக்கும் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து திருத் தங்கல், சிவகாசி, ராஜபாளையம், வில்லிபுத்தூர் உட்பட பல்வேறு ஊர்களில் 43 இடங்களில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சிக் கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் வில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், வில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரபிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்
நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி பேருந்து நிலையம் அருகே அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியச் செயலா ளர்கள் மோகன், பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
தொடர்ந்து எம்ஜிஆர், ஜெய லலிதா உருவப்படங்களுக்கு மரி யாதை செலுத்தியதோடு, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். அதன்பிறகு ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கினர். எம்ஜிஆர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் கருணாகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் நாகராஜன், முரு கானந்தம், கற்பகம் இளங்கோ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜா, ஆவின் சேர்மன் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல், மாவட்டம் முழுவதும் அதி முகவினர் பொன் விழாவைக் கொண்டாடினர்.