Regional02

இடமாறுதல் கலந்தாய்வை நடத்த பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவாரூரில் மாவட்டத் தலைவர் துரைராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முத்துவேல், பொருளாளர் கருணா காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மகேந்திரன், துணைத் தலைவர் சந்தான கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பள்ளி வேலை நாட்களை வாரத்தில் 5 நாட்களாக குறைக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு ஆகியவற்றை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT