Regional01

கல்லிடைக்குறிச்சி அருகே பெண் மர்ம மரணம் :

செய்திப்பிரிவு

கல்லிடைக்குறிச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கிட்டா. இவரது மனைவி சங்கரம்மாள் (47). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையிலும், கணவர் கிட்டா, மகன் தளவாய் ஆகியோர் மற்றொரு அறையிலும் தூங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலையில் சங்கரம்மாள் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சங்கரம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கட்டிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT