Regional02

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் - கட்டணமில்லா சேவைகளை பயன்படுத்த வேண்டுகோள் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு.பொன் னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும், இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும்.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களுடைய பிற வங்கி கணக்கில் உள்ள பணத்தை அஞ்சல் நிலையங்களில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் ஆதார் பேமெண்ட் சேவை (AEPS) மூலம் எந்த வித கட்டணமும் இல்லாமல் எளிதில் பெற முடியும்.

இதற்காக தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதி போஸ்ட்மேன் மூலமாகவும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதற்கு பயனாளிகளிடமிருந்து எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் இந்த சேவையை பெற பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை பதிவு செய்திருத்தல் அவசியம். அஞ்சல் நிலையங்களில் பணம் பெற வரும் போது பயனாளிகள் தங்கள் ஆதார் அட்டையையும், செல்போனையும் கொண்டு வரவேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT