Regional02

போக்சோவில் இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம் சின்னமனூர்சந்தை புதுத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது மகன்மணிகண்டன் (28). இவர், திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி, டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர், 17 வயது சிறுமியுடன் பழகிவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்ததோடு, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து, போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT