Regional02

எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு : இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம் :

செய்திப்பிரிவு

இப்பணி நியமனத்தில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் பணி நியமனம் பெறுவதற்கு வசதியாக, இப்போட்டித் தேர்வுக்கான அனைத்துப் பாடக் குறிப்புகளும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக, இந்தத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தொடங்கப்படுகிறது.

இப்போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 044-27660250 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறியலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT