Regional02

சமையல் தொழிலாளி தற்கொலை :

செய்திப்பிரிவு

தேனி அருகே லட்சுமிபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (32). இவர் தனது மனைவி தேவி மற்றும் குழந்தைகளுடன் ஊட்டியில் தங்கி சமையல் வேலை செய்து வந்துள்ளார்.

குடிப் பழக்கத்துக்கு அடிமை யான இவரால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் லட்சுமிபுரத்துக்கு குடும்பத்துடன் வந்து விட்டார்.

குடும்பப் பிரச்சினையால் பலமுறை விஷம் சாப்பிட்டு சிகிச்சை பெற்று குணமடைந் துள்ளார்.

இந்நிலையில், மறுபடியும் பிரச்சினை ஏற்பட்டதால் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். வீரபாண்டி காவல் சார்பு ஆய்வாளர் வரதராஜன் விசாரிக்கிறார்.

SCROLL FOR NEXT