Regional02

அணையில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை. இதன் முழு கொள்ளளவு 47 அடி. தற்போது அணையில் 26 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.

கரோனாவால் பிளவக்கல் பெரியாறு அணைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நேற்று முன்தினம் வில்லிபுத்தூரை சேர்ந்த 7 பேர் தடையை மீறி அணையில் குளிக்கச் சென்றனர். அப்போது, முருகன் (45) என்ற தொழிலாளி நீரில் மூழ்கினார். உடன் சென்ற நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் நேற்று 2-வது நாளாக அணையில் படகில் சென்று தேடி அவரது உடலை மீட்டனர்.

இதுபற்றி கூமாபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT